என் உயிர் நண்பனே இது உனக்கான வரிகள் நம் நட்பின் உணர்வுகள் என்பது எண்பதிலும் அன்பது! முன்பது.. வார்த்தைகளை உண்பது பார்வைகளால் தின்பது அன்று! கால் சட்டை நாட்களில் தோள் தொட்டு அளவளாவி காய் விட்டு கரைந்தோம் வாய்விட்டு மலர்ந்தோம் கைகொட்டி சிரித்தோம் இன்று! நரைகளில் முகத்திரைகளில் உலவுகையில் "ங்க" என்று விழித்தாலும் நாளை... காலம் கொடுக்கும் இனிய நினைவுகளுடன் பிரிதொரு வாய்ப்பில் சந்திப்போம் உயிர் துணையே.. இளகுது இதயம் நெகிழுது நெஞ்சம் மகிழுது உணர்வு..
Comments
Post a Comment